Friday, September 25, 2009

முல்லைப் பெரியாறு !

காவேரி பிரச்சினையே இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதற்குள் இன்னுமொரு நதி நீர் பிரச்சனை- முல்லை பெரியாறு. தமிழக - கேரளா எல்லையில் உள்ள இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியது தமிழர் நாடு. அதை மலையாள நாடு செவி சாய்க்கவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், அணை பலவீனமாக உள்ளது. நீர் மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மக்கள் உயிரிழக்க நேரிடும்.


தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அணையை ஆய்வு செய்தபின் நீர் மட்டத்தை உயர்த்த அனுமதி அளித்தது. கர்நாடகா மட்டும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காது, நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன என்று கேரளா அரசும் தீர்ப்பை கண்டு கொள்ள வில்லை. நீர்மட்டத்தை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்கு அதிக அளவு நீர் கிடைக்கும்.

இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனா இந்த மூளைக்கார மலையாளத்தான், முல்லை பெரியாறு அணைக்கு 1300 அடிக்கு கீழ புதிய அணை கட்ட தயாரயிட்டான். இதனால தென் தமிழக மக்களுக்கு இப்ப கெடைக்கிற கொஞ்ச நீரும் கெடைக்காது. தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்காமா விட மாட்டனுங்க இந்த கர்நாடக காரனும் மலையாளத்தானும். புதிய அணை கட்ட அனுமதி வாங்க கேரள முதல் அமைச்சர் அச்சுதானந்தன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் மற்றும் கேரள எம்.பி.க்கள் ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். அனுமதி கிடைத்து விட்டதாக அச்சுதானந்தன் கூறினார், புதிய அணைக்கான ஆய்வை தொடங்கியது கேரள அரசு . ஆனா கலைஞர் என்ன சொன்னாரு - அனுமதி கிடைத்ததாக எனக்கு ஒண்டும் தெரியவில்லைன்னு சொன்னார். உண்மை என்னான்னா கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர் வாய் மொழி உத்தரவாக அனுமதி வழங்கி இருக்கிறார். தமிழ் நாட்டை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்த மாதிரி உருப்படியா எந்த காரியமும் செய்யல.

இதைத் தொடர்ந்து, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, முதல்வர் கருணாநிதி நேற்று ஒரு அவசர எச்சரிக்கைக் கடிதம் அனுப்பினார். தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதியும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

மேலும் மத்திய அமைச்சர் ராசா, ஜெய்ராம் ரமேஷை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதி யின் எச்சரிக்கைக் கடிதத்தை நேரிலேயே வழங்கி, இந்த விவகாரத்தில் விளையாட வேண்டாம் என்று கூறியதாகத் தெரிகிறது.


மத்திய அரசின் இந்தச் செயலால் தமிழக மக்களிடையே கொதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராசா தெரிவித்தார். அப்புடி ஒன்னும் கொந்தளிப்பெல்லாம் இங்க இருக்கிற மாதிரி தெரியல. மக்கள் யாருமே இத ஒரு விசயமாவே எடுத்துக்கல. அவங்களுக்கு இப்ப இருக்கிற கவலை எல்லாம் பிரபுதேவாவும் நயன்தாராவும் (கள்ளக்காதல் ஜோடி) கல்யாணம் பண்ணிப்பாங்களா ? மாட்டாங்களா ?

கேரள அரசுக்கு புதிய அணை கட்ட ஆய்வு செய்ய அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழக அரசிடம் ஜெய்ராம் ரமேஷ் உறுதி அளித்துள்ளார். தற்போதைக்கு மகிழ்ச்சியான விஷயம். இதுல என்ன கொடுமைன்னா இந்த புதிய அணை பிரச்சினையில நீர் மட்டத்தை 152 அடியா உயர்த்த வேண்டிய பழைய பிரச்சினைய தமிழ் நாடு அரசும் மறந்துருச்சு , மக்களும் மறந்துட்டாங்க. கேரள அரசுவோட திட்டமும் நிறைவேறிவிட்டது. தமிழ்நாட்டுக்கு மறுபடியும் தண்ணி காட்டியாச்சு.

ஒரு பிரச்சினைய சமாளிக்க இன்னொரு பெரிய பிரச்சனை - அரசியல்.

எந்த ஒரு மாநிலமும் தன்னுடைய நலனை மட்டுமே பார்க்கும். நாமும் அதைத்தான் பின்பற்ற வேண்டும். நீதி மன்ற தீர்ப்பை எந்த மாநிலமும் மதிக்கல, மத்திய அரசும் தண்ணி பிரச்சினைய தீர்க்க முடியல. அப்புறம் எதுக்கு இவனுங்க எல்லாம் ? தமிழர்களைப்பற்றி இந்தியாவுக்கு அக்கறை இல்லை என்றால் நாம் ஏன் இந்தியாவைப்பற்றி கவலை பட வேண்டும். தமிழன் என்றாலே இந்தியர்களுக்கு பிடிக்காதோ ?. பயமா? ,பொறாமையா ? இல்லை நாங்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ?

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க வேண்டுமா ?
மாநில சுயாட்சி?

இப்பொழுதுதான் இந்த குரல்கள் ஒலிக்கின்றன...

நாமெல்லாம் இந்தியர் என்பதில் எனக்கு பெருமை இல்லை!!!!

இந்தியா - வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய். ஒற்றுமையில் வேற்றுமை என்பதே மெய்.

7 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நாமெல்லாம் இந்தியர் என்பதில் எனக்கு பெருமை இல்லை!!!!
///

எனக்கு பெருமை இல்லை!

புலவன் புலிகேசி said...

//அவங்களுக்கு இப்ப இருக்கிற கவலை எல்லாம் பிரபுதேவாவும் நயன்தாராவும் (கள்ளக்காதல் ஜோடி) கல்யாணம் பண்ணிப்பாங்களா ? மாட்டாங்களா ? //

அருமையா சொன்னீங்கன்னே!!!!!!!!

வெண்ணிற இரவுகள்....! said...

தமிழ்நாட்டுக்கு மறுபடியும் தண்ணி காட்டியாச்சு. " தமிழ்நாட்டுக்கு தண்ணி கொடுக்க சொன்னா தண்ணி காட்றாங்க....................................."நீ இந்தியன் என்றால் நானும் இந்தியன் நீ மலையாளத்தான் என்றால் நான் தமிழன்" இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க வேண்டுமா ?
மாநில சுயாட்சி? ஆம் கட்டாயம் பிரிக்க வேண்டும்.....................
நம் மக்கள் mini world cup பிரபுதேவாவும் நயன்தாராவும் (கள்ளக்காதல் ஜோடி) கல்யாணம் பண்ணிப்பாங்களா ? மாட்டாங்களா ? என்று முக்கியமான பிரச்சனைகளை பேசி
கொண்டிருகின்றனர்.........

ஒரு நாள் தமிழனுக்கு கழுவ கூட தண்ணி கிடைக்க போவதில்லை.............
இவன் லட்ச கணக்கான உயிர்கள் போனாலே கவலை பட மாட்டான் இவனா கொதித்து
எழ மாட்டான்............இவனா கொதிக்க போறான்

Unknown said...

உண்மையான விசயந்தான். ஆனா என்ன பண்ண இங்கிருக்கிற ஊடகங்கள் இதை
பெரிசு பண்ணோனும் . ஆனா அவனுங்களுக்குதான் அப்பப்ப கேரள கவர்ன்மெண்ட் ஒரு பக்க வெளம்பர பிச்சை போடுதே.
அப்புறம் அவனுங்க எங்க கண்டுக்குவானுங்க.

கலைஞர் மட்டும் ஒரு வார்த்தை சொன்னாப்போதும் , கேரளா போற ரெயில் ரோட்டுக்கு குறுக்கே மேடை போட்டு பாட்டுப்பாடிருவாங்க. அதனால அவர் சொன்னதும் உண்மைதான்.அதே மாதிரி நம்மாளுங்க கேஸ் போடறதுன்னா போடலாம். எப்படி?

கேரளா போற ரெயில் தடம் மாறீ ஊருக்குள்ள வந்தா கோயமுத்தூரோ, திருப்பூரோ அல்லது சேலமோ எங்கிருந்தாலும் ஒரு 10000 பேரு செத்துப்போயிருவாங்க . அதனால கேரளாவுக்கு எங்க ஊரு வழியா ரெயிலு, பஸ் எதுவும் ஓட்டக்கூடாது அப்படினு சொல்லி நாம ஒரு கேஸ் போட்டமுன்னா
கேரளாவுக்கு பேதி எடுத்துரும் . அப்புறம் பாருங்க. என்ன நடக்குமுன்னு.

3D MODELING & RIGGING said...

i am not indian and also tamilan i am a human thats all

வேல் கண்ணன் said...

//இப்பொழுதுதான் இந்த குரல்கள் ஒலிக்கின்றன... //
குரல் அதிகபடுத்தவும் அதனை செயல் ஆக்கவும்
பாடுபடுவோம் நண்பா
//i am not indian and also tamilan i am a human thats ஆல்//
மனிதனுக்கு என்ன என்ன உணர்வு வேண்டும். .?

இளந்தமிழன் said...

நன்றி வேல் கண்ணன்.
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு மனிதன் என்ற உணர்வு இல்லாதபோது நமக்கு மட்டும் ஏன்?

Post a Comment