Friday, September 18, 2009

தண்ணீர் ! தண்ணீர் !!



தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலையில் நாம் உள்ளோம். இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தை விட விலை மதிப்பற்ற செல்வமகிவிடும் இந்த தண்ணீர். டாஸ்மாக் அனைத்தையும் government எடுத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வது போல, தனியார் மயமாகிக் கிடக்கும் இந்த மினரல் வாட்டர் கம்பெனிகளையெல்லாம் அரசு ஏற்றுக்கொண்டு மிக்கக்குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கலாம். காசு இருப்பவர்கள் தான் சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டிய நிலையில் சென்னை உள்ளது. எங்க ஊரு பக்கமெல்லாம் கடைக்கு போயி வாட்டர் பாட்டில் வாங்கின ஏற இறங்க பாப்பாய்ங்க. பருவ மழையும் இல்லை.இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டியாச்சு. அப்பறம் எப்புடி ?  

தண்ணீரெல்லாம் மனுஷனுக்கு அடிப்படை தேவை. அதையே நாம காசு கொடுத்து வாங்குறோம். கடல் நீரெல்லாம் வத்திபோனா கூட, இந்த கடல் நீர குடி நீரா மாத்திர திட்டம் வராது. ஏன்னா அரசியல் வாதிகள் தான் நிறைய மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு  ஓநெர் . பெப்சி , கோக் கம்பெனி எல்லாம் இருந்த நீர் ஆதாரத்தை எல்லாம் உறிஞ்சி கொள்ளை லாபம் பாக்குதுங்க. நாமெல்லாம் கொஞ்சம் தப்புசிட்டோம். அடுத்து வர்ற சந்ததி எல்லாம் லேப்ல தண்ணீரை வச்சுக்கிட்டு "இதுதான் தண்ணீர். ஒரு காலத்துல மக்கள் இததான் குடிச்சாங்க " அப்புடின்னு சொன்னாலும் சொல்வாங்க.
சென்னையில் எது corporation  வாட்டர்? எது சாக்கடை? ங்கற வித்தியாசத்தை கண்டு பிடிக்கிறவங்களுக்கு ஆயரம் ருபாய் பரிசு தரலாம் அல்லது ஒரு மாசத்துக்கு நல்ல தண்ணி குடிக்க கொடுக்கலாம்.எனக்கு ஒரு சந்தேகம்....இந்த மினரல் வாட்டர் கம்பெனி-ங்க எல்லாத்துக்கும் தண்ணீர் எங்க இருந்து கிடைக்குது? எங்காவது போயி தண்ணிய புடிச்சுட்டு வந்து அத சுத்தப்படுத்தி அதிக விலைக்கு விக்கிரானுங்க. அதே வேலைய அரசு செய்யலாம். டாஸ்மாக்- ல வர்ற லாபத்தை இதுல செலவு பண்ணலாம். இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கே பிரச்சினை இல்லாம தண்ணீர் போகுது. ஆனா இந்த கர்நாடககாரனும் , மலையாலதானும் நமக்கு நல்லா "தண்ணி" காட்றானுங்க. இதுல தேசிய நதிகளை இணைப்பது பற்றி வேற பேசுறானுங்க. 

ரூம்ல தண்ணி கலியாபோச்சு........நான் போயி ஒரு கேன் தூக்கிட்டு வர்றேன்.....

7 comments:

புலவன் புலிகேசி said...

சூப்பர்னே!!! இதப் பத்தி யோசிக்கரதுக்கே இந்த அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் டாஸ்மாக் போக வேண்டியிருக்கும். அங்க போய் குடிச்சிட்டு சண்ட போட்டுட்டு மக்களை மறந்துருவாய்ங்க....................

ஊடகன் said...

//அடுத்து வர்ற சந்ததி எல்லாம் லேப்ல தண்ணீரை வச்சுக்கிட்டு "இதுதான் தண்ணீர். ஒரு காலத்துல மக்கள் இததான் குடிச்சாங்க " அப்புடின்னு சொன்னாலும் சொல்வாங்க. //


நடந்தாலும் நடக்கலாம்..... அந்த நேரத்தில் கழுவுவதற்கு COCO-COLA, PEPSI போன்றவைகளை பயன்ப்படுதலாம்.............

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல இடுக்கை இதை படிப்பர்கள் தயவு செய்து PEPSI COKE FANTA MIRANDA SLICE MAZZA போன்ற பூச்சி கொல்லி மருத்துகளை குடிப்பதை நிறுத்துவோம்

வேல் கண்ணன் said...

//நல்ல இடுக்கை இதை படிப்பர்கள் தயவு செய்து PEPSI COKE FANTA MIRANDA SLICE MAZZA போன்ற பூச்சி கொல்லி மருத்துகளை குடிப்பதை நிறுத்துவோம்//
வழிமொழிகிறேன்

இளந்தமிழன் said...

நன்றி வேல்கண்ணன். நான் எப்போதோ நிறுத்தி விட்டேன்.

லெமூரியன்... said...

நண்பா உங்கள் பதிவிற்கு வோட்டு போட வோட்டு பொத்தானை சொடுக்கினால் அது வேலை செய்வதில்லை....எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை என்று நினைக்கிறேன்...விரைவில் சரி செய்கிறேன்...தற்ப்பொழுது பினூட்டம் மட்டும் இடுகிறேன்...நீங்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான உண்மையே....கோகோ கோலா ஆலைக்காரன் தண்ணீரை உரிஞ்சிகிறான் ஒருப்பக்கம்....மறுப்பக்கம் ஆட்சிக் கட்டிலில் அமரும் மற்றும் அமர்ந்திருக்கிற அயோக்கிய பயல்களின் ஆசியோடு ஆற்று மணலும் அள்ளப் பட்டு தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் முயற்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேரிக்க் கொண்டிருக்கிறார்கள்.....இதில் வேதனையான விஷயம்...நம் ஆற்று படுகைகளில் மண் அள்ளப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப் படுகிறது....அங்குள்ள ஆறுகளில் மண் எடுக்க அந்த நாடு அரசு தடைக் சட்டம் கொண்டுள்ளது....இது எப்டி இருக்கு..!

சீனு said...

http://jeeno.blogspot.com/2004/04/blog-post.html

Post a Comment